| Stoploss |
| நாம் வாங்கிய பங்கின் விலை வாங்கிய விலையிலிருந்து குறைய தொடங்கினால் அதிகளவு நட்டம் ஏற்படாமல் குறிப்பிட்ட அளவு நட்டத்தில் வெளியேறுவது.இதனை Support Level - ல் வைத்து கணக்கிடுகிறார்கள். |
| Buyers |
| வாங்க நினைப்பவர்கள் |
| Sellers |
| விற்க நினைப்பவர்கள் |
| Auction |
| வாடிக்கையாளர் Cash Market-ல் தவறுதலாக தன்னிடம் இல்லாத பங்குகளை விற்றவிட்டு , அதனை கவனிக்காமல் விட்டால் மற்றும் DIS Slip கொடுக்காமல் விட்டால், பங்குச்சந்தையே (NSE,BSE) ஏலத்தின் முலம் பங்குகளை வாங்கித்தரும். ,,இந்தமுறையே Auction முறை ஆகும். |
| Merger |
| ஒரு நிறுவனத்துடன் மற்றொரு நிறுவனத்தை இணைப்பது. |
| Opening |
| இன்றைய வர்த்தகத்தில் பங்கின் துவக்க விலை. |
| Low |
| இன்று குறைந்த விலை |
| Close |
| இன்றைய வியாபாரத்தின் கடைசி விலை. |
| Previous Close |
| முந்தைய நாளின் கடைசி விலை. |
| High |
| ,இன்றைய அதிகபட்ச விலை. |
BTST(Buy Today Sell Tomorrow) இன்று வாங்கி நாளை விற்பது. |
| STBT(sell Today Buy Tomorrow) இன்று விற்று நாளை வாங்குவது. |
| CMP(Current market Price ) தற்போது பங்கின் விலை |
| contractnote |
| நமது தரகு நிறுவனத்தின் பெயர் மற்றும் செபியின் பதிவு எண் இருக்கவேண்டும். மற்றும் நாம் செய்த வர்த்தகத்தின் விலை இதர வரிகள் , இவையனைத்தும் இதில் வரும். இதனை பெற்றக் கொள்வது மிகவும் அவசியமாகும். நாம் வர்த்தகம் செய்ததர்க்கு இதுவே சாட்சியாகும். |
| Hold |
| தற்போது நம்மிடம் உள்ள பங்குகளை விற்க வேண்டாம், வைத்திருங்கள். |
| Delisting |
| பங்கு வெளியீடு செய்துள்ள நிறுவனங்கள் அது வெளியிட்டுள்ள சந்தையில் (NSE,BSE) அதன் சட்ட திட்டங்களுக்கு உட்பட வேண்டும். நிறுவனத்தின் நடவடிக்கைகள் பங்கதாரர்க்கு தெரியவேண்டும். பங்குதாரர்களின் குறைகளை தீர்க்கவேண்டும். இதை தவறினாலோ, அல்லது அந்த நிறுவனத்தின் 8 சதவீதத்திற்க்கு வைத்திருந்தாலோ. இதனை Delisting செய்யப்படும். |
| Profit Booking |
| நாம் வாங்கிய பங்குகளை இலாபத்தில் விற்கும் இடம். |
| Premium |
| ஏற்கனவே நன்றாக நடக்கும் நிறுவனம் அதன் பங்குகளை சந்தையில் கூடுதல் விலைக்கு விற்கபடும். அந்த நிறுவனம் மீண்டும் பங்குகளை வெளியிடுகிறது. அதனை முகப்பு விலைக்கு கொடுப்பது கூடுதல் விலையை வைத்துக்கொடுத்தால் அந்தத்தொகையை Premium என்கிறோம். |
| Discount |
| வெளியிடப்பட்ட பங்கின் விலையை விட குறைவாக பரிவர்த்தனை நடந்தால் அதனை Discount என்பர். |
| Volume |
| இன்றைய தினத்தில் வாங்கிவிற்கும் பங்குகளின் எண்ணிக்கை. |
| தரகு நிறுவனங்களாலோ அல்லது நமது முதலிடு செய்துள்ள நிறுவனங்கள் செயல்பாடுகள் சரிவர இல்லையெனில் Sebi யிடம் முறையிடலாம். www.sebi.gov.in |
28/03/2010
5.மற்றவை(சந்தையில் புதியதாக முதலீடு செய்பவர்களுக்கு)
Labels:
புதியதாக முதலீடு