| பங்கு சந்தை-அறிமுகம் |
| வணக்கம்! பங்குசந்தையை நன்கு அறிந்தவர்களுக்கு இது பணம் காய்க்கும் மரம், அறியாதவர்களுக்கு இது ஒரு சூதாட்டம். சந்தையை பற்றி நன்கு அறியாமல் நுழைந்தால் முதலுக்கே மோசமதான். இலாபமும் அதிகம் என்றால் கவனம் அதிகம் தேவை தானே. இத்தனை காலம் பங்குச்சந்தையை பற்றி தெரியாமல் இருந்தால் கவலையை விடுங்கள். இனி பங்குசந்தையை புதிதாக பார்போம். |
| பங்குசந்தை ஒரு முதலீடு ( Investment ) |
| நிலம், வீடு,தங்கம்,வெள்ளி ஆகியவற்றில் நீங்கள் செய்யும் முதலீடுகள் (Safe Investment) பாதுகாப்பானது. அதில் நஷ்டம் அடைய காரணங்கள் மிக குறைவுதான். ஆனால் இவற்றை எல்லா தரப்பு மக்களாளும் முதலீடு செய்ய முடியாது. மற்றும் அதற்கு தகுந்த பாதுகாப்பு தரவேண்டும். அடுத்தகட்டம், Mutual Fund, மற்றும் வங்கிகள் இவையும் பாதுகாப்பானது தான். ஆனால் இதில்வரும்(Returns) அடையும் பலன் குறைவு. எனவே நமது அடுத்த கட்டம் முதலீடு தான் பங்குசந்தை |
| வளரும் நாடுகளில் இந்தியா தற்போது முன்னிலையில் உள்ளது, நாட்டின் முதலீடு, தொழில் வளர்ச்சி, கல்வி, அறிவியல்,விவசாயம் என எல்லா துறைகளின் முன்னேற்றமே நாட்டின் வளர்ச்சி ஆகும். பங்கு சந்தை என்பது அந்த நாட்டின் தொழில்துறை வளர்ச்சியின் ஆணிவேரை போன்றது. |
| இப்பொழுது தொழில்துறை மற்ற எல்லாதுறைகளுக்கும் பங்குசந்தை எப்படி? உதவுகிறது என்று பார்ப்போம். ரிலையன்ஸ் நிறுவனத்தை பற்றி நாம் அனைவரும் அறிந்ததுதான் திருபாய் அம்பானியின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட சிறிய நிறுவனம் , இப்பொழுது இந்த அபார வளர்ச்சிக்கு காரணம் பங்குசந்தைதான். |
| சிறிய நிறுவனங்களுக்கு முலதனம் குறைவு, அதனை வங்கியிடம் கடன் பெற்று ஆரம்பிக்கலாம்,ஆனால் அதிக அளவு முதலீடு தேவைப்படும் பொழுது யாரிடம் வாங்குவது, உங்களிடம் தான். நீங்கள் தான் அதன் பங்குதாரர்கள் ஆக போகிறீர்கள் எப்படி? |
| புதியதாக தொடங்க உள்ள நிறுவனங்கள் மற்றும் தற்போது செயல்பட்டு வரும் நிறுவனங்கள் தங்களின் நிதித் தேவைக்காக தங்கள் நிறுவனத்தின் பங்குகளின் ஒரு பகுதியை பொதுமக்களுக்கு விற்கிறது. அதாவது உங்களிடம் நிதியைப் பெற்றுக்கொண்டு அந்த நிறுவனத்தின் பங்குதாரராக இணைத்துக் கொள்கிறது. |
|
| முதல்நிலை பங்குச்சந்தை (Primary Market) |
நிறுவனங்கள் புதிதாக வெளியிடும் பங்கு பத்திரங்களை வாங்குவது |
| புதிய பங்கு பத்திர வெளியீடு -IP O ( Intitial- Public Offer ) |
பங்குகளை வெளீயிடும் நிறுவனங்கள் அதனை என்ன விலைக்கு வெளியிடலாம் என்று முடிவு செய்வார்கள். அதாவது நிறுவனத்தின் 10ரூபாய் முகமதிப்பு (Face Value) உள்ள பங்குகளை 10ரூபாய்க்கோ அல்லது அந்த நிறுவனம் நிர்ணயிக்கும் தொகைக்கோ வெளியிடுவார்கள்.இதன் மூலம் நிறுவனத்திற்கு தேவையான நிதி கிடைக்கும். IPO வாங்கும்போது கவனத்தில்கொள்ள வேண்டியது |
இரண்டாம் நிலை பங்குச்சந்தை (Secondary Market ) |
| பெரும்பாலும் அதிகளவில் IPO-க்கள் விண்ணப்பிக்கும்போது பெரும்பாலானோர்க்கு பங்குகள் கிடைக்காமல் போகலாம். நாம் விண்ணப்பித்து நமக்கு கிடைக்காமல் போன பங்குகள் நீணடகால முதலீட்டுக்கு நன்றாக உள்ளது என்று அறிகிறோம். ஏற்கனவே அந்த பங்குகளை வைத்திருப்பவர்களிடமிருந்து இரண்டாவதாக பெறுகிறோம். ( தேசிய பங்குச்சந்தை (NSE), மும்பை பங்குச் சந்தையில் (BSE) Online Trading முலம் வர்த்தகம் நடைபெறுகிறது ) . இதனை இரண்டாம்நிலை சந்தை (Secondary Market ) என்கிறோம். Secondary Market - ல் கவனத்தில் கொள்ள வேண்டியது. |
| Euquty(Cash Market) |
| நாம் SBI பங்குகள் 100 வாங்க நினைக்கிறோம் தற்போது ஒரு பங்கின் விலை 2100 என்றால் 100 பங்குகள் 2,10,000 ஆகும். Euquties-ல் முழுத்தொகையும் செலுத்தி பங்குகள் வாங்க வேண்டும். IPO -விலோ அல்லது Secondary Market-- லோ நாம் வாங்க நினைக்கும் பங்கிற்கும் முழுத்தொகை கொடுத்துதான் வாங்க முடியும். இதனை Cash Market என்கிறோம். |
| Futures |
| மேலே CashMarket-ல் நாம் முழு பணத்தையும் செலுத்திதான் வர்த்தகம் செய்யமுடியும். இது அனைவராலும் முடியாது,இதனை நிவர்த்தி செய்யவே Future அறிமுகபடுத்தபட்டது. இதில் நாம் வாங்க நினைக்கின்ற பங்குகளுக்கு செலுத்தவேண்டிய தொகையில் 60% தொகை (Margin) செலுத்தினாலே போதும், ஆனால் ஒன்று, இரண்டு என்று பங்குகளை வாங்க முடியாது, இதனை ( Lot ) ஆகதான் வாங்க முடியும், ஒவ்வொரு பங்கிற்கு தகுந்தவாறு Lotsize, மற்றும் Margin Amount மாறுபாடும் . |
| இதில் உள்ள சிறப்பு Equtuiesல் நாம் இன்று விற்றால் (Short) அதனை 3.30 மணிக்குள் வாங்கி விடவேண்டும். இல்லாவிட்டால் Aution போய்விடும் அதாவது நாம் கையில் பங்கு இல்லாமல் விற்றதால் நமக்கு 1% Penalty போடுவார்கள். Future-ல் இந்த பிரச்சனை நமக்கு கிடையாது, வாங்கினாலோ அல்லது விற்றாலோ அந்த மாத கடைசி வியாழகிழமைக்குள் அந்த வர்த்தகத்தை நிறைவு செய்தால்போதும். |
| இது எளிதானதும் சுவாரசியமாக இருந்தாலும் ஆபத்து அதிகம் ( உதாரணம் - RNRI பங்கு LotSiz 7250 என்றால் ஒரு ரூபாய் இறங்கினாலும் நஷ்டம்தான். இது உங்களது மனநிலை, பொருளாதாரத்தை பொறுத்தது. |
| Options |
| இது மற்ற இரண்டையும் விட எளிமையானது. நீங்கள் உங்களுக்கு வந்த செய்திகள் அடிப்படையாகக் கொண்டு செய்வது. infoysis நிறுவனம் 2000 போகும் என்று எதிர்பார்கிறீர்கள், தற்போது அதன்விலை 1800, உங்களை போலவே 2000 போகும் என்பவர்கள் அதற்கு ஒரு விலை நிர்ணயித்து வாத்தகம் நடக்கும். இதனை CallOption என்று சொல்வார்கள். ஒரு வேளை இப்பொழுது உள்ளே விலையைவிட கீழே போகும் என்பவர்கள் அதற்கு ஒரு விலை வைத்து விற்பார்கள் இதனை Put Option என்கிறோம். |
28/03/2010
1.பங்கு சந்தை-அறிமுகம்(சந்தையில் புதியதாக முதலீடு செய்பவர்களுக்கு)
Labels:
புதியதாக முதலீடு