28/03/2010

5.மற்றவை(சந்தையில் புதியதாக முதலீடு செய்பவர்களுக்கு)

Stoploss
நாம் வாங்கிய பங்கின் விலை வாங்கிய விலையிலிருந்து குறைய தொடங்கினால் அதிகளவு நட்டம் ஏற்படாமல் குறிப்பிட்ட அளவு நட்டத்தில் வெளியேறுவது.இதனை Support Level - ல் வைத்து கணக்கிடுகிறார்கள்.

Buyers
வாங்க நினைப்பவர்கள்

Sellers
விற்க நினைப்பவர்கள்

Auction
வாடிக்கையாளர் Cash Market-ல் தவறுதலாக தன்னிடம் இல்லாத பங்குகளை விற்றவிட்டு , அதனை கவனிக்காமல் விட்டால் மற்றும் DIS Slip கொடுக்காமல் விட்டால், பங்குச்சந்தையே (NSE,BSE) ஏலத்தின் முலம் பங்குகளை வாங்கித்தரும். ,,இந்தமுறையே Auction முறை ஆகும்.

Merger
ஒரு நிறுவனத்துடன் மற்றொரு நிறுவனத்தை இணைப்பது.

Opening
இன்றைய வர்த்தகத்தில் பங்கின் துவக்க விலை.

Low
இன்று குறைந்த விலை

Close
இன்றைய வியாபாரத்தின் கடைசி விலை.

Previous Close
முந்தைய நாளின் கடைசி விலை.

High
,இன்றைய அதிகபட்ச விலை.

BTST(Buy Today Sell Tomorrow)
இன்று வாங்கி நாளை விற்பது.

STBT(sell Today Buy Tomorrow)
இன்று விற்று நாளை வாங்குவது.

CMP(Current market Price )
தற்போது பங்கின் விலை

contractnote
நமது தரகு நிறுவனத்தின் பெயர் மற்றும் செபியின் பதிவு எண் இருக்கவேண்டும். மற்றும் நாம் செய்த வர்த்தகத்தின் விலை இதர வரிகள் , இவையனைத்தும் இதில் வரும். இதனை பெற்றக் கொள்வது மிகவும் அவசியமாகும். நாம் வர்த்தகம் செய்ததர்க்கு இதுவே சாட்சியாகும்.

Hold
தற்போது நம்மிடம் உள்ள பங்குகளை விற்க வேண்டாம், வைத்திருங்கள்.

Delisting
பங்கு வெளியீடு செய்துள்ள நிறுவனங்கள் அது வெளியிட்டுள்ள சந்தையில் (NSE,BSE) அதன் சட்ட திட்டங்களுக்கு உட்பட வேண்டும். நிறுவனத்தின் நடவடிக்கைகள் பங்கதாரர்க்கு தெரியவேண்டும். பங்குதாரர்களின் குறைகளை தீர்க்கவேண்டும்.
இதை தவறினாலோ, அல்லது அந்த நிறுவனத்தின் 8 சதவீதத்திற்க்கு வைத்திருந்தாலோ. இதனை Delisting செய்யப்படும்.

Profit Booking
நாம் வாங்கிய பங்குகளை இலாபத்தில் விற்கும் இடம்.

Premium
ஏற்கனவே நன்றாக நடக்கும் நிறுவனம் அதன் பங்குகளை சந்தையில் கூடுதல் விலைக்கு விற்கபடும். அந்த நிறுவனம் மீண்டும் பங்குகளை வெளியிடுகிறது. அதனை முகப்பு விலைக்கு கொடுப்பது கூடுதல் விலையை வைத்துக்கொடுத்தால் அந்தத்தொகையை Premium என்கிறோம்.

Discount
வெளியிடப்பட்ட பங்கின் விலையை விட குறைவாக பரிவர்த்தனை நடந்தால் அதனை Discount என்பர்.

Volume
இன்றைய தினத்தில் வாங்கிவிற்கும் பங்குகளின் எண்ணிக்கை.

தரகு நிறுவனங்களாலோ அல்லது நமது முதலிடு செய்துள்ள நிறுவனங்கள் செயல்பாடுகள் சரிவர இல்லையெனில் Sebi யிடம் முறையிடலாம். www.sebi.gov.in

நேற்றைய விலையைவிட இன்று விலை குறைந்துள்ளது.
நேற்றைய விலையைவிட இன்று விலை மேலே உயர்ந்துள்ளது

4.தினசரி வியாபாரம் ( Intra Day )(சந்தையில் புதியதாக முதலீடு செய்பவர்களுக்கு)

தினசரி வியாபாரம் ( Intra Day )

ஒரே தினத்தில் விற்று வாங்கியோ அல்லது வாங்கி விற்றோ செய்யப்படுவது தினசரி வியாபாரம். இதில் அதிக அளவில் மனதை அலைபாய (Panic) விடக்ககூடாது.

  • உலக சந்தையை கவனிக்க வேண்டும்.
  • முந்தைய நாளின் ( High, Low, Close, Open )இதனை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
  • நாம வாங்க நினைக்கின்ற (Volume) வாங்கிவிற்ற பங்குகளின் எண்ணிக்கையை கவனிக்கவேண்டும்.
  • Support, Resident Level களை பார்த்து செயல்படவேண்டும்

  • Intraday தேசிய பங்குச்சந்தையில் ( NSE ) வர்த்தகம் செய்வது உத்தமம

3.குறுகிய கால முதலீட்டாளர்கள் ( Swing Traders )(சந்தையில் புதியதாக முதலீடு செய்பவர்களுக்கு)

  • முதலீட்டாளர்களைப் போல நிறுவனத்தின கடந்த காலத்தை (Fundamental Analys ) அறிய தேவையில்லை.
  • Trend - ற்க்கு தகுந்தாற்போல் நாம் செல்ல வேண்டும்.




    இந்த வகையான ( Graph ) நிறுவனத்தின் பங்குகளின் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்தாலும் தொடர்ந்து மேல்நோக்கி செல்வதை கவனிக்க வேண்டும். இத்தகைய பங்குகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • அதிக அளவில் வாங்கி விற்கும் (Volume)நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • தற்போது எந்த துறையைச் சார்ந்த பங்குகள் சிறப்பாக உள்ளது என்பதை கண்டறிய வேண்டும்.
  • புதிய வரிகள்,அதன் சாதக மற்றும் பாதகங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.அது எந்த துறைறை பாதிக்கும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
  • இலாபத்தில் பங்கு ( Dividend ) , கூடுதல் பங்கு ( Bonus Shares ) தரும்பொழுது பங்குகளின் விலை சற்று உயரும்.
  • தினசரி நமது சந்தையின் அனைத்து நிகழ்வுகளையும் கண்காணிக்க வேண்டும்.உலக சந்தையின் ஏற்ற இறக்கங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்.

2.முதலீட்டாளர்கள்(சந்தையில் புதியதாக முதலீடு செய்பவர்களுக்கு)







முதலீட்டாளர்கள்

புதியதாக வெளியிடும் பங்குகளை வாங்கும்பொழுது (IPO-Initial Public Issue) கவனிக்கவேண்டியவை.(Fundamental Analysis)

  1. நீங்கள் வாங்கும் பங்கின் நிறுவனத்தின் உரிமையாளர்களின் விவரம்.
  2. நிறுவனத்தை நடத்த தகுதியானவர்களா? தலைமை பொறுப்பு மாறும்பொழுது அதன் செயல்பாடுகள் மாற வாய்ப்பு அதிகம்.
  3. நிறுவனத்தின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதா?
  4. நிறுவனத்தின் நற்பெயர் ( GoodWill )
  5. கடந்த 3 ஆண்டுகளில் நிறுவனத்தின் இலாபம் தொடர்ந்து உயர்ந்து வருகிறதா? என்பதை கவனிக்க வேண்டும்.
  6. வாடிக்கையாளர்களுடன் நிறுவனத்தின் உறவு ( Public Relationship) எந்த நிலையில் உள்ளது.
  7. வைப்புநிதி ( Reserve ) அதாவது, பற்றாகுறை சமயத்தில் உபயோகிக்கும் பணம் கையிருப்பு எவ்வளவு உள்ளது.
  8. நிறுவனம் தனது போட்டியாளர்களிடமிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
  9. நிறுவனத்தின் மீது வரிஏய்ப்பு மற்றும் வாடிக்கையாளர்கள் கொடுத்த வழக்கு உள்ளதா மேலும் வெளிநாட்டு நாட்டுகிளைகளில் அதன்மீது ஏதாவது வழக்குகள் உள்ளதா? என்று தெரிந்துகொள்ள வேண்டும்.
  10. நிறுவனம் என்ன காரணத்திற்கு பங்கு சந்தையில் பணம் வசூலிக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். முந்தைய கடனை வேண்டும்.அடைப்பதற்கு, பங்குகளை வெளியிட்டால் அந்நிறுவனத்தின் நிதிநிலை சரியாக இல்லை.
  11. விளம்பரங்களை கவனத்தில் கொள்ள தேவையில்லை
  12. நிறுவனம் இலாபத்தில் பங்கு (Dividend ), Bonus தருவதாக அறிவித்துள்ளதா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
  13. நிறுவனத்தின் காலாண்டு அறிக்கைகளை கவனிக்க வேண்டும். ,இதனை அறிய www.sebi.gov.in இந்த வலைதளத்தில் பார்க்கலாம்.

(Secondary Market)

IPO வில் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டியவை, இவற்றிலும் கவனிக்கப்பட வேண்டும்.

தற்போது வர்த்தகத்தில் உள்ள பங்குகளை வாங்கும்பொழுது கவனிக்க வேண்டியவை.


கூடுதல் பங்கு ( Bonus shares )
நிறுவனம் கூடுதல் பங்குகள் தருகிறதா? என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

இலாபத்தில் பங்கு
ஒவ்வொரு ஆண்டும் நிறுவனத்தின் லாபத்தின் ஒரு பகுதியை தமது நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு வழங்கு கிறது. லாபத்தில் பங்கின் விழுக்காடு (%) தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறதா என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பத்திர பிளவு (Split )
நமது பங்கின் அதிகாரபூர்வமான விலையை குறைப்பார்கள், இதனால் இலாபம் கூடுவதில்லை.
உதாரணம்:- Infosys பங்கு Rs.11,000 வரை போனது, இதனை Split செய்தார்கள். அது Rs.1800 ஆக குறைத்தனர். இதற்கு காரணம் அனைத்து தரப்பினரும் வாங்குவதற்கு ஏதுவாக மாற்றப்படுகிறது.

புத்தகத்தில அந்த பங்கின் மதிப்பு (Book Value)

இதவே அந்த நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு ஆகும்.

பங்கு ஈட்டல் (EPS - Earning Per Share):-

இந்ந ஆண்டின் நிகர லாபம் / மொத்த பங்கு கள் = EPS ஒவ்வொரு ஆண்டும் கணக்கிடும்போது EPS உயர்ந்துகொண்டே போனால் அந்த நிறுவனம் லாபம் ஈட்டும் திறன் அதிகரிக்கிறது என்று அர்த்தம்.


ஒவ்வொரு பங்கின் விகிதம்(P/E Ratio- Price / Earning Ratio)
ஒரு நிறுவனத்தின் EPS 10 ஆக இருக்கும்பொழுது அதன் சந்தையின் மதிப்பு 10 அல்லது அதற்குமேல் உள்ளது. இவ்வாறு ஒரு பங்கின்விலை பங்குச்சந்தையில் EPS விட எத்தனை மடங்கு அதிகமாக விற்கப்படுகிறது என்பதை கணக்கிடப்படுவதயே P/E Ratio என்கிறோம்.
P / E = நடப்பு சந்தை விலை ( Current Market ) / பங்கு ஈட்டல் (EPS) .
ஒரு பங்கின் EPS ற்க்கும் அதன் பங்குசந்தை மதிப்புற்க்கும் துறையை சார்ந்து மாறுபடுகிறது.

கட்டுமான துறையின் P/E Ratio 10 ஆக இருந்தால் நிங்கள் வாங்க நினைக்கும் நிறுவனத்தின் P/E Ratio
10ரூ குறைவாக இருந்தால் மட்டுமே அந்த பங்கிள் முதலீடு செய்யலாம்.
10ரூ அதிகமாக இருந்தால் அதனை தவிர்ப்பது நல்லது.


உதாரணம்:- வங்கித்துறை சிறப்பாக இருந்தாலும் ஒவ்வொரு வங்கியின் செயல்பாடுகள் வெவ்வேறாக இருக்கும். வங்கிகள் தொழில்துறை, வீட்டுக் கடன். கிராமப்புற வளர்ச்சி, என தனி தனி நிறுவனங்களாக செயல்படுகிறது.இவற்றில் தற்போது சிறப்பாக உள்ள துறையை சார்ந்த வங்கியில் முதலீடு செய்ய வேண்டும். இதுவே மற்ற நிறுவனங்களுக்கும் பொருந்தும். நல்ல நிறுவனம் அதன் செயல்பாடுகள் நமக்கு திருப்தி அளிக்கின்றன. உடனே அதன் பங்குகளை வாங்க நினைக்க கூடாது.
பங்கின் விலை உயரத்தில் இருக்கும்பொழது வாங்கினால் அதுவும் ஆபத்துதான். சற்று விலை குறைந்த பின்பு வாங்கலாம்.

1.பங்கு சந்தை-அறிமுகம்(சந்தையில் புதியதாக முதலீடு செய்பவர்களுக்கு)

பங்கு சந்தை-அறிமுகம்
வணக்கம்! பங்குசந்தையை நன்கு அறிந்தவர்களுக்கு இது பணம் காய்க்கும் மரம், அறியாதவர்களுக்கு இது ஒரு சூதாட்டம். சந்தையை பற்றி நன்கு அறியாமல் நுழைந்தால் முதலுக்கே மோசமதான். இலாபமும் அதிகம் என்றால் கவனம் அதிகம் தேவை தானே.
இத்தனை காலம் பங்குச்சந்தையை பற்றி தெரியாமல் இருந்தால் கவலையை விடுங்கள். இனி பங்குசந்தையை புதிதாக பார்போம்.

பங்குசந்தை ஒரு முதலீடு ( Investment )
நிலம், வீடு,தங்கம்,வெள்ளி ஆகியவற்றில் நீங்கள் செய்யும் முதலீடுகள் (Safe Investment) பாதுகாப்பானது. அதில் நஷ்டம் அடைய காரணங்கள் மிக குறைவுதான். ஆனால் இவற்றை எல்லா தரப்பு மக்களாளும் முதலீடு செய்ய முடியாது. மற்றும் அதற்கு தகுந்த பாதுகாப்பு தரவேண்டும். அடுத்தகட்டம், Mutual Fund, மற்றும் வங்கிகள் இவையும் பாதுகாப்பானது தான். ஆனால் இதில்வரும்(Returns) அடையும் பலன் குறைவு. எனவே நமது அடுத்த கட்டம் முதலீடு தான் பங்குசந்தை

வளரும் நாடுகளில் இந்தியா தற்போது முன்னிலையில் உள்ளது, நாட்டின் முதலீடு, தொழில் வளர்ச்சி, கல்வி, அறிவியல்,விவசாயம் என எல்லா துறைகளின் முன்னேற்றமே நாட்டின் வளர்ச்சி ஆகும். பங்கு சந்தை என்பது அந்த நாட்டின் தொழில்துறை வளர்ச்சியின் ஆணிவேரை போன்றது.

இப்பொழுது தொழில்துறை மற்ற எல்லாதுறைகளுக்கும் பங்குசந்தை எப்படி? உதவுகிறது என்று பார்ப்போம். ரிலையன்ஸ் நிறுவனத்தை பற்றி நாம் அனைவரும் அறிந்ததுதான் திருபாய் அம்பானியின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட சிறிய நிறுவனம் , இப்பொழுது இந்த அபார வளர்ச்சிக்கு காரணம் பங்குசந்தைதான்.

சிறிய நிறுவனங்களுக்கு முலதனம் குறைவு, அதனை வங்கியிடம் கடன் பெற்று ஆரம்பிக்கலாம்,ஆனால் அதிக அளவு முதலீடு தேவைப்படும் பொழுது யாரிடம் வாங்குவது, உங்களிடம் தான். நீங்கள் தான் அதன் பங்குதாரர்கள் ஆக போகிறீர்கள் எப்படி?

புதியதாக தொடங்க உள்ள நிறுவனங்கள் மற்றும் தற்போது செயல்பட்டு வரும் நிறுவனங்கள் தங்களின் நிதித் தேவைக்காக தங்கள் நிறுவனத்தின் பங்குகளின் ஒரு பகுதியை பொதுமக்களுக்கு விற்கிறது. அதாவது உங்களிடம் நிதியைப் பெற்றுக்கொண்டு அந்த நிறுவனத்தின் பங்குதாரராக இணைத்துக் கொள்கிறது.
  • முதல் நிலை பங்குச்சந்தை (Primary Market)
  • இரண்டாம் நிலை பங்குச்சந்தை (Secondary Market )

முதல்நிலை பங்குச்சந்தை (Primary Market)

நிறுவனங்கள் புதிதாக வெளியிடும் பங்கு பத்திரங்களை வாங்குவது

புதிய பங்கு பத்திர வெளியீடு -IP O ( Intitial- Public Offer )

பங்குகளை வெளீயிடும் நிறுவனங்கள் அதனை என்ன விலைக்கு வெளியிடலாம் என்று முடிவு செய்வார்கள். அதாவது நிறுவனத்தின் 10ரூபாய் முகமதிப்பு (Face Value) உள்ள பங்குகளை 10ரூபாய்க்கோ அல்லது அந்த நிறுவனம் நிர்ணயிக்கும் தொகைக்கோ வெளியிடுவார்கள்.இதன் மூலம் நிறுவனத்திற்கு தேவையான நிதி கிடைக்கும்.

IPO வாங்கும்போது கவனத்தில்கொள்ள வேண்டியது

இரண்டாம் நிலை பங்குச்சந்தை (Secondary Market )

பெரும்பாலும் அதிகளவில் IPO-க்கள் விண்ணப்பிக்கும்போது பெரும்பாலானோர்க்கு பங்குகள் கிடைக்காமல் போகலாம். நாம் விண்ணப்பித்து நமக்கு கிடைக்காமல் போன பங்குகள் நீணடகால முதலீட்டுக்கு நன்றாக உள்ளது என்று அறிகிறோம். ஏற்கனவே அந்த பங்குகளை வைத்திருப்பவர்களிடமிருந்து இரண்டாவதாக பெறுகிறோம். ( தேசிய பங்குச்சந்தை (NSE), மும்பை பங்குச் சந்தையில் (BSE) Online Trading முலம் வர்த்தகம் நடைபெறுகிறது ) . இதனை இரண்டாம்நிலை சந்தை (Secondary Market ) என்கிறோம்.

Secondary Market - ல் கவனத்தில் கொள்ள வேண்டியது.

Euquty(Cash Market)
நாம் SBI பங்குகள் 100 வாங்க நினைக்கிறோம் தற்போது ஒரு பங்கின் விலை 2100 என்றால் 100 பங்குகள் 2,10,000 ஆகும். Euquties-ல் முழுத்தொகையும் செலுத்தி பங்குகள் வாங்க வேண்டும்.

IPO -விலோ அல்லது Secondary Market-- லோ நாம் வாங்க நினைக்கும் பங்கிற்கும் முழுத்தொகை கொடுத்துதான் வாங்க முடியும். இதனை Cash Market என்கிறோம்.

Futures
மேலே CashMarket-ல் நாம் முழு பணத்தையும் செலுத்திதான் வர்த்தகம் செய்யமுடியும். இது அனைவராலும் முடியாது,இதனை நிவர்த்தி செய்யவே Future அறிமுகபடுத்தபட்டது.
இதில் நாம் வாங்க நினைக்கின்ற பங்குகளுக்கு செலுத்தவேண்டிய தொகையில் 60% தொகை (Margin) செலுத்தினாலே போதும், ஆனால் ஒன்று, இரண்டு என்று பங்குகளை வாங்க முடியாது, இதனை ( Lot ) ஆகதான் வாங்க முடியும், ஒவ்வொரு பங்கிற்கு தகுந்தவாறு Lotsize, மற்றும் Margin Amount மாறுபாடும் .

இதில் உள்ள சிறப்பு Equtuiesல் நாம் இன்று விற்றால் (Short) அதனை 3.30 மணிக்குள் வாங்கி விடவேண்டும். இல்லாவிட்டால் Aution போய்விடும் அதாவது நாம் கையில் பங்கு இல்லாமல் விற்றதால் நமக்கு 1% Penalty போடுவார்கள். Future-ல் இந்த பிரச்சனை நமக்கு கிடையாது, வாங்கினாலோ அல்லது விற்றாலோ அந்த மாத கடைசி வியாழகிழமைக்குள் அந்த வர்த்தகத்தை நிறைவு செய்தால்போதும்.
இது எளிதானதும் சுவாரசியமாக இருந்தாலும் ஆபத்து அதிகம் ( உதாரணம் - RNRI பங்கு LotSiz 7250 என்றால் ஒரு ரூபாய் இறங்கினாலும் நஷ்டம்தான். இது உங்களது மனநிலை, பொருளாதாரத்தை பொறுத்தது.

Options
இது மற்ற இரண்டையும் விட எளிமையானது. நீங்கள் உங்களுக்கு வந்த செய்திகள் அடிப்படையாகக் கொண்டு செய்வது. infoysis நிறுவனம் 2000 போகும் என்று எதிர்பார்கிறீர்கள், தற்போது அதன்விலை 1800, உங்களை போலவே 2000 போகும் என்பவர்கள் அதற்கு ஒரு விலை நிர்ணயித்து வாத்தகம் நடக்கும். இதனை CallOption என்று சொல்வார்கள். ஒரு வேளை இப்பொழுது உள்ளே விலையைவிட கீழே போகும் என்பவர்கள் அதற்கு ஒரு விலை வைத்து விற்பார்கள் இதனை Put Option என்கிறோம்.